மனைவியின் பிறப்புறுப்பை ஊசி நூலால் தைத்த கொடூர கணவன் - பதறவைத்த சம்பவம்!
கட்டிய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் மனைவியின் பிறப்புறுப்பை ஊசி நூலால் தைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிங்க்ராலி மாவட்டத்தில் உள்ள மடா கிராமத்தில் 65 வயதான நபர் ஒருவர் தனது 55 வயது மனைவியுடன் வசித்துவந்தார். இவர், மனைவியின் நடத்தை மீது அவருக்கு சந்தேகம் வரவே, இதுகுறித்து இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தனது மனைவியை அந்த நபர் அடித்து கொடுமைப்படுத்திவந்துள்ளார். ஒருகட்டத்தில் மனைவியின் மீதான சந்தேகம் அதிகரித்த நிலையில், தனது மனைவியை ஒரு அறையில் போட்டு பூட்டி, அவரது பிறப்புறுப்பை ஊசி நூல் வைத்து தைத்துள்ளார்.
இதில் வலியால் அலறிய அந்த பெண், அங்கிருந்து தப்பித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். இதன் பின்னர் அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து அவருடைய அந்தரங்க உறுப்பில் தையல் போட்ட ஊசியும், நூலும் நீக்கப்பட்டது..
பெண் கொடுத்த புகாரை அடுத்து, அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பொதுவாக மருத்துவத்துக்கு பயன்படுத்தும் நூலுக்கு பதிலாக சாதாரண ஊசி மற்றும் நூலால் அப்பெண்ணுக்கு தையல் போட்டதாகவும், இதன் காரணமாக அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், நாங்கள் வசித்து வரும் கிராமத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருடன் எனக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக எனது கணவர் சந்தேகம் கொண்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் வரும். அடிக்கவும் செய்வார். ஆனால் தற்போது ஒரு படி மேல் சென்று எனது அந்தரங்க உறுப்புக்கு கணவர் தையல் போட்டுவிட்டார். அவர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அவரது மனைவி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை