செய்திகளை பில்டர் செய்து செய்தி வெளியிடும் ஊடகங்கள்! ஊடகங்களை பொரிந்து தள்ளிய ஈ.பி.டி.பி உறுப்பினர்!
யாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை அமர்வு இன்று பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது சபை உறுப்பினர்கள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ,பால்மா தட்டுப்பாடு ,மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என்பதனை அடையாளப்படுத்தும் விதமாக எரிவாயு சிலிண்டர்கள், பால்மா பைகள் போன்றவற்றுடன் சபை அமர்வில் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பான பதாகைகளையும் உறுப்பினர்கள் தாங்கி அமர்வில் கலந்து கொண்டனர். கொவிட் தொற்று காரணமாக சபை உறுப்பினர் ஒருவர் கடந்த அமர்வில் கொள்ளவில்லை அத்தோடு அவருடன் தொடர்பில் இருந்தாக மற்றுமொரு உறுப்பினர் தாமாகவே தன்னை சுய தனிமைப்படுத்தி கொண்டார்.
இந்த நிலையில் கடந்த அமர்வில் கட்டுடை 10ஆம் வட்டார ஈபிடிபி உறுப்பினரான திலீபன் உறுப்பினர்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு தனிமைப்படுத்தல் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அவ்விடயம் இன்றைய சபை அமர்வில் வழங்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இதனை கடுமையாக ஆட்சேபித்து குறிப்பிட்ட உறுப்பினர்கள் ஈபிடிபி உறுப்பினரை மன்னிப்புக் கோருமாறு சபையில் வலியுறுத்தி இருந்தனர். இதன்போது சபையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.
உறுப்பினர்களின் கடுமையான குற்றச்சாட்டுகளின் போது மாத்திரையினை வாயில்போட்டும், அடிக்கடி தொலைபேசியில் உரையாடியும், தொற்றுநீக்கி திரவத்தினால் அடிக்கடி தனது கைகளை சுத்தம் செய்வது போன்றும் பதட்டத்துடன் பாசாங்கு செய்து கொண்டிருந்த ஈபிடிபி 10ஆம் வட்டார உறுப்பினரான திலீபன் இறுதியாக தனது வாதத்தினை தொடங்கியிருந்தார்.
இதன்போது சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் நாய் போல குரைப்பதாக கூறனார். இதனை ஏனைய உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
திடீரென ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் பாய்ந்த ஈபிடிபி உறுப்பினர் ஊடகங்கள் தமது கருத்துக்களை "பில்டர்" செய்து தான் வெளியிடுவதாகவும் கடுமையாக ஊடகங்கள் மீது பாய்ந்தார்.
இதேவேளை சபை ஆரம்பமாவதற்கு முன்னர் ஊடகவியலாளர் நின்ற இடத்திற்கு அருகில் வந்த குறித்த உறுப்பினர் "ஊடகவியலாளர்களுக்கு ஒரு வேலையும் இல்லை. வேலை இல்லாமல் கமராவைத் தூக்கிக்கொண்டு இங்கு வந்து நிற்கிறார்கள்" எனவும் பொரிந்துதள்ளினார்.
இதேவேளை இன்றைய சபை ஆரம்பத்தில் கொவிட் தொற்றினால் சாவடைந்த வல்வெட்டித்துறை நகர சபை நகரபிதா விற்கு ஏனைய உறுப்பினர்கள் எழுந்துசென்று அஞ்சலி செலுத்திய போதும் உறுப்பினர் திலீபன் எழுந்து சென்று அஞ்சலி செலுத்தாமல் நாகரிகமற்ற முறையில் அமர்ந்திருந்தமை உறுப்பினர்க மனஞ்சுழிக்க வைத்தது.
கருத்துகள் இல்லை