• Breaking News

    யாழ். கடலில் படகு விபத்து - மீனவர் மாயம்!

     கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    யாழ். குருநகர் கடற்கரையிலிருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை மூவர் மீன்பிடிக்க சென்றனர்.

    இவர்கள் நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும் போது இரணைதீவில் அவர்களது படகு விபத்திற்குள்ளானது.

    மூவரில் 2 மீனவர்கள் நீந்திக் கரையேறி, நேற்று வியாழக்கிழமை வீடு சென்றுள்ளனர்.

    எனினும் மற்றைய மீனவர் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad