உடல் எடையை குறைப்பதற்கு அனைவருக்கும் இலகுவான வழி
உடல் எடையால் அவதிப்படுபவர்கள் ஏராளமானவர்களை நாம் பார்த்திருப்போம். என்னதான் கடைகளில் மாத்திரை மற்றும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்தாலும் குறையவில்லையே என்று நினைப்பவர்கள் இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்.
சில உணவுகளில் இயற்கையாகவே உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை அதிகமாக உள்ளது.
உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் மஞ்சள், தேன் எலுமிச்சை போன்றவைக்கு இயற்கையாகவே கொழுப்பை குறைக்கும் தன்மை உள்ளது இதில் தேன் பண்டைய காலத்திலிருந்தே மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தேன் மற்றும் எலுமிச்சை சாப்பிடுவதால் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை. தேன் மற்றும் எலுமிச்சை கலந்து தயாரிக்கக் கூடிய இந்த கிரீமை நீங்கள் பயன்படுத்தி வரும் பொழுது கண்டிப்பாக இடுப்பின் சுற்றளவை ஒரு நாளைக்கு ஒரு சென்டிமீட்டர் அளவு குறைக்கலாம்.
தேவையான பொருட்கள் :
1. 200 கிராம் முள்ளங்கி
2. எலுமிச்சை தோல் 3
3. தேன் 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
1. முதலில் எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொள்ளவும்.
2. பிறகு அதில் இருந்து விதைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. முள்ளங்கியை தோல் சீவி எடுத்துக் கொண்டு சிறு சிறு துண்டுகளாக்கி எலுமிச்சை பழத்தை தோலுடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
4. நன்கு அரைத்த முள்ளங்கி மற்றும் எலுமிச்சை தோல் கலவையுடன் 3 டேபிள்ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
5. இந்தக் கலவையானது க்ரீம் போன்று இருக்கும். இதை கண்ணாடி பாட்டில்களில் ஊற்றி வைத்துக் கொண்டு ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
6. தினமும் இந்த கலவையை ஒரு ஸ்பூன் அளவு உணவிற்கு முன்னர் இரண்டு வேளை சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
மூன்று வாரம் இதனை நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது உடல் எடை மற்றும் இடுப்பு சுற்றளவு நல்ல மாற்றம் காண முடியும்.
இது உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் மூளையின் செயல்திறனை ஊக்குவிக்கும் மற்றும் கண் குறைபாடு, கேட்கும் திறன் குறைபாடு ஆகியவற்றையும் சீரமைக்கும் தன்மை கொண்டது.
கருத்துகள் இல்லை