சுழிபுரத்தில் தவறான முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு - கல்விளான் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த குடும்பஸ்தர் நேற்று முன்தினம் (2021.08.10) விஷம் அருந்தி உள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றைய தினம் (11) உயிரிழந்துள்ளார்.
ப.நிரோஜன் (வயது 33) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
.
கருத்துகள் இல்லை