• Breaking News

    மாஸ்க் அணியுமாறு கூறிய சுகாதார பரிசோதகரின் மண்டையை மண்வெட்டியால் பதம்பார்த்த முதியவர்!

     மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் முகக்கவசம் அணியுமாறு கூறியதையடுத்து பொதுச்சுகாதார பரிசோதகருக்கும், முதியவருக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டதை அடுத்து ஆத்திரமடைந்த முதியவர் மண்வெட்டி பிடியினால் பொதுச்சுகாதார பரிசோதகரின் தலையை பதம் பார்த்தார்.

    இந்த சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்ற நிலையில், தாக்குதல் நடத்திய 80 வயதான முதியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் காயமடைந்த 62 வயதான பொதுச்சுாதார பரிசோதகர் மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலையக பகுதியை சேர்ந்த ஒருவர் பல தசாப்தங்களின் முன் வேலை தேடி மட்டக்களப்பிற்கு வந்த நிலையில், தற்பொழுது பொது நிலமொன்றில் சிறிய கொட்டகை அமைத்து வசித்து வருகிறார்.

    தற்போது சுமார் 80 வயது மதிக்கத்தக்க அவர், பிரதேசத்தில் உள்ளவர்கள் தயாரிக்கும் சிற்றுண்டியை அவர் மூலம் விற்பனை செய்வது வழக்கம். இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம், பொதுச்சுகாதார பரிசோதகரால் அவர் அறிவுறுத்தப்பட்டதை அடுத்து முதியவருக்கும், பொதுச்சுகாதார பரிசோதகருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

    இதன்போது ஆத்திரமடைந்த முதியவர், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மண்வெட்டி பிடியினால், பொதுச்சுகாதார பரிசோதகரின் தலையில் தாக்கியுள்ளார். இதனையடுத்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகரிற்கு 8 தையலிடப்பட்டது.

    மேலும் சம்பவம் தொடர்பில் கைதான முதியவர் நேற்று வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 13ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad