தோல்வியை ஏற்றார் ஜனாதிபதி கோட்டாபய - எதிரணி எம்.பி சுட்டிக்காட்டு
கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை வழங்குவதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் காட்டிய தாமதமே, தொற்று மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த தம்மால் முடியாது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக் கொண்டுள்ளதாலேயே, சுகாதார அமைச்சை முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளித்திருப்பதாகவும், கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்காக எதிர்க்கட்சி என்ற வகையில் தாம் ஒத்துழைப்புக்களை வழங்க தயார் எனவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை