சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசி செலுத்தப்படும் விபரங்கள்
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நாளையும் (30) நாளை மறுதினமும் (31) கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகை செலுத்தப்படவுள்ளது.
அந்த வகையில் நாளைய தினம் (30) வட்டு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் ஜே/158, ஜே/167, ஜே/177 ஆகிய கிராம பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும்,
பண்ணாகம் வடக்கு ஆறுமுக வித்தியாசாலயத்தில் ஜே/175, ஜே/176 ஆகிய பிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இரண்டாவது செலுத்துகை செலுத்தப்படவுள்ளது.
நாளை மறுதினம் (31) தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் ஜே/168, ஜே/169 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும்,
மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் ஜே/170, ஜே/171 கிராம சேவகர்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது - என சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை