வெளிச்சத்திற்கு வந்தது இலங்கையின் மோசமான நிலை! நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள் இதோ...
இலங்கையில் அண்மைக் காலமாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வைத்தியசாலைகளும் நிரம்பிவழிகின்றன.
அந்த வகையில் இதுவரை இரத்தினபுரி, கராப்பிட்டிய, றாகம மற்றும் ஐ.டி.எச் மருத்துவமனைகள் அவசர நிலையை அறிவித்துள்ளன.
மேலும் தற்போது பாதிக்கப்படுவோருக்கு ஆபத்தான அறிகுறிகள் உள்ளதுடன், நோயின் தாக்கமும் பாரதூரமாக உள்ளது.
இவர்கள் ஒட்சிசனின் உதவியுடனேயே இருக்கும் நிலையும் காணப்படுகின்றது.
மேலும், இலங்கையில் கொரோனாவால் மரணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது.
இவ்வாறான நிலையில், இலங்கையின் தற்போதைய மோசமான சூழ்நிலையை பிரதிபளிக்கும் புதிய புகைப்படங்கள் சமூகவளைத்தலங்களில் வேகமாக பரவி வருகின்றது.
இதில், களுபோவில வைத்தியசாலையில் இடமின்றி வைத்தியசாலை நடைபாதையிலும், மக்கள் இடமின்றி தவிப்பதை காணக்கூடியதாகவும் உள்ளது.
அத்துடன், பிணவறைகளில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதையும் இந்த புகைப்படங்கள் வெளிக்காட்டுகின்றன.
கருத்துகள் இல்லை