இறந்த தம்பியின் உடலை பார்க்க சென்ற அண்ணன் மீது கிளிநொச்சி பொலிசார் கொடூர தாக்குதல்!
கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் நேற்று முந்தினம் நண்பர்களுடன் குளிக்க சென்ற ரஜீந்திரகுமார் கோகுல்ராஜ் என்பவர் குளத்தில் மூழ்கி இறந்துவிட்டார்.
பின்னர் உடல் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.
தம்பி இறந்த செய்தியை அறிந்து துடிதுடித்து வைத்தியசாலைக்கு கோகுல்ராஜின் அண்ணண் நவநீதன் வந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த பொலிசார் தம்பியின் உடலை பார்வையிட அண்ணனுக்கு அனுமதிக்காமல் அவரை பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்கள்.
இதன்போது அங்கு வந்திருந்த நண்பர்கள் மற்றும் இறந்தவரின் அண்ணன் (நவநீதன்) ஆகியோருக்கும், பொலிசாருக்கும் வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது. வாக்குவாதம் முற்றி இரு தரப்பிற்கும் இடையே கைகலப்பாக மாறியிருக்கிறது.
இதன்போது இறந்த நபரின் அண்ணாவான நவநீதன் மீது பொலிசார் தமது வன்மத்தை காட்டி கடுமையாக தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
பின்னர் நவநீதனை ஐந்திற்கு மேற்பட்ட பொலிஸார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பின் கைவிலங்கு மாட்டி பொலிஸ் நிலையம் கொண்டு சென்று அங்கும் கோரத்தனமாக தாக்கியுள்ளார்கள்.
பின் மறுநாள் பொலிஸார் நீதிமன்றில் நவநீதனை ஆஜர் செய்து மேலும் தடுப்புக்காவலை நீடிக்க கோரியிருக்கிறார்கள்.
ஆனால் நீதிமன்றம் நவநீதனை பினையில் விடுவித்திருக்கிறது.
பொலிஸாரின் கோரத்தாக்குதலால் நவநீதனின் உடலில் பலத்த காயங்கள், தழும்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
பொலிஸாரின் இந்த கொடூர தாக்குதலுக்கு கிளிநொச்சி பகுதி மக்கள் பலர் தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை