சென்னை துறைமுகத்தில் ஸ்ரீலங்கா கடற்படையின் கப்பல்
இலங்கைக்கு தேவைாயான ஒட்சிசனை இந்தியாவில் இருந்து கொண்டு வருவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சென்னை துறைமுகத்தில், கடற்படைக்கு சொந்தமான கப்பலில், ஒட்சிசன் அடங்கிய கொள்கலன்களை ஏற்றும் பணிகள் நேற்று இரவு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த கப்பல், இன்று இலங்கையை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
முன்னதாக இலங்கையில் டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவிக் கொண்டிருப்பதாகவும், ஒட்சிசன் இல்லாமல் நோயாளிகள் உயிரிழக்க நேரிடும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்திருந்தனர்.
அதுமாத்திரமன்றி சாதாரண நோயாளிகளுக்கும் இதே நிலைமை நீடிக்கும் என்றும் பகிரங்கமாக எச்சரிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த முயற்சியினை அரசாங்கம் எடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்துகள் இல்லை