• Breaking News

    பாண் வெதுப்பகங்களிலும் சடலங்களை தகனம் செய்ய நேரிடலாம் - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

     கோவிட் தொற்று நோயை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஊடக கண்காட்சியை நிறுத்தி விட்டு, தொற்று நோயை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

    அவசியமான நேரத்தில் நாட்டை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. ஆபத்து அதிகரித்த வந்த போது, கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கு பதிலாக கட்டுப்பாடுகளை தளர்த்தினர்.

    நாளாந்தம் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என விசேட மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    கொரோனா மரணங்களை தகனம் செய்ய போதுமான சுடுகாடுகள் இல்லை என்ற காரணத்தினால், பாண் வெதுப்பகங்களிலும் சடலங்களை தகனம் செய்ய நேரிடும்.

    நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை கூட இடைநிறுத்திவிட்டு, தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad