கொடிகாமத்தில் உள்ள வீடொன்றில் ஆயுத முனையில் திருட்டு!
யாழ். கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த திருட்டு கும்பல் ஒன்று அவ் வீட்டில் இருந்தவர்களின் நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் நேற்று (2021.08.11) அதிகாலை இடம் பெற்றுள்ளது.
தாயும் மகளும் அவ்வீட்டில் தனித்திருந்த வேளை முகங்களை துணியால் மூடிய திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்து, கூரான ஆயுதங்களை காட்டி அவர்களை மிரட்டி நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை