படகு விபத்தில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!
நேற்று முன்தினம் இரணைதீவில் இடம்பெற்ற படகு விபத்தில் காணாமல் போன மீனவர் ஒருவர் இன்றையதினம் (2021.08.14) மண்டைதீவு கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மன்னாரைச் சேர்ந்த குறித்த நபர் குருநகரிலுள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து நேற்று முன்தினம் கடற்றொழிலுக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் தொழிலுக்கு சென்ற படகு இரணைதீவில் விபத்திற்குள்ளானது. அதில் பயணித்த மூவரில் இருவர் நீந்திக் கரையேறி வீடு திரும்பிய நிலையில் மற்றையவர் காணாமல் போயுள்ளார்.
காணாமல் போனவரை தேடும் பணியினை கடற்படையினர் முன்னெடுத்திருந்தனர். இதன்போது அவரது சடலம் மண்டைதீவு கடலில் மிதந்து கொண்டிருந்த வேளை சடலத்தினை கடற்படையினர் மீட்டனர்.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை