பிரான்சில் இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் கழுத்தறுத்து கொடூர கொலை
கொரோனா பெருந்தொற்றின் பின்னணியில் பிரான்சில் புலம்பெயர் இலங்கை குடும்பம் ஒன்றில் கொடூரமான படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.
பாரிஸ் புறநகர பகுதியான வால்துஓஸ் பிராந்தியத்தில் 52 வயதான மனைவியும் 21 வயதான மகளும் கழுத்துகள் அறுக்கப்பட்டும் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இரவுநேர பணிமுடித்து காலை 10 மணியளவில் வீடுதிரும்பிய இலங்கை பூர்வீகத்தை கொண்ட குடும்பத்தலைவர் தனது 52 வயதான மனைவியும் 21 வயதான மகளும் அவர்களது படுக்கை அறையில் கழுத்துகள் அறுக்கப்பட்டும் குத்தப்பட்டகாயங்களுடன் உடலங்களாக கண்டதையடுத்து இந்த குருரசம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் ஒரு கூரிய கத்தி அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டிருந்தது. இந்த குருர சம்பவத்திலும் கொலையாளி இந்த குடும்பத்திற்குள் இருப்பதற்கான சாத்தியங்களை காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகள் குறிப்பிடுகின்றன.
ஆயினும் இந்த கட்டத்தில் இதுகுறித்த திடமான அனுமானங்களை வெளியிடுவதற்கு காவற்துறை விரும்பவில்லை.
கருத்துகள் இல்லை