• Breaking News

    தமிழீழம் அமையவேண்டும்!! பிஹார் ஊடகங்களில் செய்தி

     ‘தமிழர்களின் தாயகமான தமிழீழம் அமைய வழி காண வேண்டும்’ என்ற செய்தி பிகார் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது.

    சமதா கட்சி மற்றும் ஈழத் தமிழர் நட்புறவு மையம் இணைந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை அண்மையில் சந்தித்தனர். அவரிடம் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு அமைய 3 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    1) தமிழர்களின் தாயகமான தமிழீழம் அமைய வழி காண வேண்டும்.

    2) ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை வன்முறைக்கு ஈடுசெய் நீதியைத் தேடுவது.

    3) ஈழத் தமிழர்களின் தன்முடிவுரிமை கோரிக்கையை ஆதரிப்பது.

    - ஆகிய 3 கோரிக்கைகளையும் மத்திய அரசிடம் வலியுறுத்தவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    அனைத்தையும் கேட்டுக்கொண்ட பிரனாயி விஜயன் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெறுவதாகவும், இதன் முதற்கட்டமாக கேரள முதலமைச்சரை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சந்திப்பில் சமதா கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் என். ஏ. கோன், சமதா கட்சியின் தமிழ் நாடு மாநிலப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மணிவண்ணன், ஈழத்தமிழர் நட்புறவு மைய பிரதிநிதிகள் பேராசிரியர் ராமு.மணிவண்ணன் மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad