• Breaking News

    வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு

     கிளிநொச்சி – முரசுமோட்டை சேற்றுக்கண்டி பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    நேற்று (01-08-2021) பிற்பகல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரியூட்டப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad