யாழில் covid-19 வைரஸ் தொற்றினால் மேலும் ஒரு பெண் மரணம்!
யாழ். அரியாலை கனகரத்தினம் வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர் covid-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 56 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலத்தினை சுகாதார விதிமுறைப்படி தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி யாழ். மாவட்டத்தில் covid-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்திருக்கின்றது.
கருத்துகள் இல்லை