10,000 தமிழ் பெண்களை பாலியல் வதைசெய்தது சிறிலங்கா இராணுவம்!! இந்திய தலைவர்கள் குற்றச்சாட்டு!
இலங்கையில் சுமார் 10,000 வரையிலான தமிழ் பெண்களை சிறிலங்கா படையினர் பாலியல் வல்லுறவு புரிந்துள்ளதாக ஜோர்ஜ் பெர்ணான்டஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
George Fenandas Foundation என்ற அமைப்பின் தலைவர்களும், இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுமான திரு. அருண் நாயக் மற்றும் திரு. உத்தம் காண்டே போன்றவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய அவசரக் கடிதத்தலேயே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்கள்.
சிறிலங்கா படையினரால் 3 இலட்சம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 98ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளதாகவும், 400 இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர்கள், இந்தியப் பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை