செப்டம்பர் 11! மீண்டும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் தலிபான்கள்?
அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட செப்டம்பர் 11ஆ திகதியான அதே நாளில் தாலிபன்களின் புதிய அரசு ஆப்கானிஸ்தானில் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரபல ஆங்கில ஊடகத்தை மேற்கோளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரை தாலிபன்கள் ஆட்சி செய்தனர். அப்போது பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா பயங்கராவதிகள் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை விமானத்தை மோதி தகர்த்தனர்.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அமெரிக்கா இந்த தாக்குதலில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து பின்லேடனை ஒப்படைக்குமாறு தாலிபன்களிடம் அமெரிக்கா கேட்டது. ஆனால் அதில் அவருக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்ததுடன் அவரை ஒப்படைக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் மீது போரை அறிவித்த அமெரிக்காஇ பின்லேடன் மற்றும் அல்கொய்தா இயக்கத்தினரை தேடி தேடி வேட்டையாடியது.
அத்துடன் தாலிபன்களையும் ஓட ஓட விரட்டி அடித்தது. ஒரு கட்டத்தில் பின்லேடன் மற்றும் அல்கொய்தா இயக்கத்தினரை கொன்ற பின்னர்இ தாலிபன்களுடன் சமரசம் பேசிய அமெரிக்காஇ படைகளை ஆகஸ்ட் 31ம் திகதியுடன் விலக்கி கொள்வதாக அறிவித்தது.
இதையடுத்து ஆப்கன் அரசு படைகளுக்கு எதிராக போரை தொடங்கிய தாலிபன்கள்இ ஆகஸ்ட் 15 காபூலை கைப்பற்றி புதிய ஆட்சியை அமைப்பதற்கு தயாராகி வருகின்றனர்.
பல்வேறு குழுவினரிடம் நிர்வாக அமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பேசினார்கள்.
கருத்துகள் இல்லை