வெற்றிலைக்கேணி பகுதியில் 227 கிலோ எடையுடைய கேரளா கஞ்சா மீட்பு!
இன்று அதிகாலை 1.30 மணியளவில் வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து கடற்படையினரால் 227 கிலோ எடையுடைய கேரளா கஞ்சாப் பொதிகளும் டிங்கி படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா பொதிகளும் குறித்த படகும் மீட்கப்பட்டுள்ளன.
கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பித்துச் சென்றுள்ள நிலையில் மீட்கப்பட்ட படகும் கஞ்சாப் பொதிகளும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை