23ஆவது வயதில் கால்தடம் பதிக்கும் Google !
இன்று தன்னுடைய 23ஆவது பிறந்தநாளைக் கூகிள் நிறுவனம் கொண்டாடுகின்றது. தன்னுடைய பிறந்தநாளைப் பிரதிபலிக்கும் முகமாக கூகிள் நிறுவனம் முகப்பக்கத்தில் Birthday cake Doodle ஐ வடிவமைத்துள்ளது. இதில் L என்ற எழுத்திற்குப் பதிலாக Doodle Cake இன் மெழுகுவர்த்தி அமைந்துள்ளது.
1997 செப்டெம்பெர் 15ல் கூகிள் தனது களப்பெயரைப் (Domain) - www.google.com பதிவு செய்து கொண்டதோடு கூகிள் நிறுவனமானது 1998 செப்டம்பர் 4ம் திகதி Larry Page மற்றும் Sergey Brain ஆகியோரால் Menlo Park , Californiaவில் நிறுவப்பட்டது.
கூகிள் முதல் 7 வருடங்கள் தன்னுடைய பிறந்தநாளை செப்டெம்பர் 4ஆம் திகதி கொண்டாடினாலும் பின் தன்னுடைய பிறந்த நாளை செப்டெம்பர் 27ஆம் திகதி கொண்டாட முடிவு செய்தது.
இந் நிறுவனத்தின் முதலாவது ஊழியராக Craig Silverstain நியமிக்கப்பட்டார். தற்பொழுது (2021) கூகிள் நிறுவனத்தில் 139,995 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
கூகிள் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) சுந்தர்ப் பிச்சை காணப்படுகின்றார்.
கருத்துகள் இல்லை