யாழில் நேற்று 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்டத்தில் 280 பேருக்கு ஒரு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேஷன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 74 தொற்றாளர்களும் அன்டிஜன் பரிசோதனையில் 206 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் யாழ். மாவட்டத்தின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 244 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று மாலை வரை கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மரணங்கள் 289 ஆக உயர்வடைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை