உடுவிலில் இராணுவ புலனாய்வ பிரிவினரால் 3 வாள்கள் மீட்பு
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் கிழக்குப் பகுதியிலுள்ள தோட்ட காணியொன்றில் இருந்து 3 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
தாக்குதல் ஒன்றுக்கு தயாராக இருப்பதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த ஆயுதங்கள் இன்று காலை 10 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வாள்கள் சுன்னாகம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை