ஒன்பது வழக்குகளுடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்கள் கெரோயினுடன் இளவாலை பொலிசாரால் கைது !
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பன்னமூலை பகுதியில் ஒன்பது வழக்குகளுடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்கள் இளவாலை பொலிசாரால் நேற்றைய தினம் (2021.09.26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடார்பாக மேலும் தெரியவருவதாவது இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னமூலை பகுதியைச்சேர்ந்த ஒன்பது வழக்குகளுடன் தொடர்புபட்ட 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பொலிசார் தேடிவந்த நிலையில் குறித்த சந்தேக நபர் தலைமறைவாகியிருந்தார்.
இந்நிலையில் இளவாலை பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த இடம் முற்றுகையிடப்பட்டது.
இதனை தொடர்ந்து சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர்.
மேலும் கைது செய்த நபரிடம் இருந்து 2g 15mg ஹெரோயின் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இளவாலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த சந்தேக நபருடன் திருட்டிற்கு உடந்தையாக இருந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரையும் பொலிசார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் குறித்த இரு சந்தேகபர்களிடமும் திருடப்பட்ட தொலைபேசியை 2500 ரூபாய்க்கு கொள்வனவு செய்த 31 வயதுடைய அதே பகுதியைச்சேர்ந்த ஒருவரையும் திருட்டு பொருளை வாங்கிய குற்றச்சாட்டில் இளவாலை பொலிசார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மூன்று சந்தேக நபர்கள் மீதும் இளவாலை பொலிசார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததோடு நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஐப்பசி மாதம் ஆறாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை