தென்னிலங்கையில் குழந்தைக்காக பால் மா திருடியவருக்கு 500,000 ரூபா சரீர பிணை
காலியில் 1150 ரூபாய் பெறுமதியான பால் மா டின் திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செயய்ப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை 5 லட்சம் பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்வதற்கு காலி பதில் நீதவான் லலித் பத்திரன உத்தரவிட்டுள்ளார்.
காலி மிலிந்துவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய இளம் தந்தை ஒருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மருந்து பெற்றுக் கொள்வதற்காக மீலிந்துவ பிரதேசத்திற்கு சென்ற போது அங்கு பால் மா டின் ஒன்றை திருடிய சந்தர்ப்பத்தில் கடை ஊழியர்களை அவரை பொலிஸாரிடம் பிடித்து கொடுத்துள்ளனர்.
சந்தேக நபர் குழந்தை கொண்ட ஒருவராகும். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் முடக்கநிலை காரணமாக அவர் தொழிலை இழந்துள்ளார்.
தொழில் இல்லாமையினால் குழந்தைக்கு பால் மா இல்லாம் போனமையால் இவ்வாறு திருட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக சந்தேக நபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி தெரிவித்துள்ளனர்.
எனினும் பொலிஸார் அந்த விடயத்தை நிராகரித்த நிலையில் சந்தேக நபர் போதை பொருளுக்கு அடிமையானவர் என கூறியுள்ளனர்.
இந்த அனைத்து விடயங்களை கருத்திற் கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கருத்துகள் இல்லை