காதலனின் பேச்சை கேட்டு 7 மாத சிசுவை கலைத்த இளம்பெண் - அதிர்ந்துபோன பெற்றோர்கள் எடுத்த முடிவு!
காதலன் பேச்சை கேட்டு யூடியூப் வீடியோவை பார்த்து 7 மாத கருவை கலைத்த பெண்ணின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சாஹில் வஹாப் கான் எனபவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துவந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் கர்ப்பம் தரித்துள்ளார். உடனே கருவை கலைக்க நினைத்து இருவரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
ஆனால் கரு 7 மாதங்கள் வளர்ந்து விட்டதால் கலைக்க முடியவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், அப்பெண் சாஹில் வஹாப்பிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
ஆனால் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், சாஹில் வஹாப் யூடியூப் வீடியோ பார்த்து குழந்தையை உடனடியாக கலைக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அந்த பெண் வேறு வழியின்றி வீடியோ பார்த்து குழந்தையை கலைக்க முயற்சி செய்துள்ளார். அப்பெண்ணின் பெற்றோர் வெளியூர் சென்ற நேரம் பார்த்து கருக்கலைப்பு செய்து சிசுவை புதைத்துவிட்டார்.
அதன்பின்னர், அப்பெண்ணின் பெற்றோர் ஊரில் இருந்து வந்த பிறகு நடந்த உண்மைகள் பற்றி அவர்களுக்கு தெரியவந்தது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் பெற்றோர் சாஹில் வஹாப் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சாஹிலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை