• Breaking News

    வவுனியாவில் ஜனவரி முதல் இன்று வரை 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

     வவுனியாவில் இவ்வருடம் ஜனவரி முதல் இன்று அதிகாலை 8 மணிவரையுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

    இந்த விடயத்தை மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.

    இடைக்கால பருவ மழை மாலை வேளைகளில் இன்னும் சில தினங்கள் நீடிக்கும் எனவும், இடி மின்னல் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் பொது மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

    இம்மாதம் 18ஆம் திகதியிலிருந்து இன்று 25ஆம் திகதி அதிகாலை 8 மணியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் மட்டும் 117.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

    எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad