• Breaking News

    உடனடியாக நீக்குங்கள் - இலங்கைக்கு அதிரடியாக அறிவித்த இந்தியா

     அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொறகொடவின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

    அமைச்சரவை அந்தஸ்து பெற்ற முதலாவது உயர்ஸ்தானிகராக மிலிந்த மொறகொட நியமிக்கப்பட்டார்.

    அவர் தற்போது இந்தியாவில் தனது கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் இந்திய ஜனாதிபதியிடம் தனது நியமன நற்சான்று பத்திரத்தை இன்னும் கையளிக்கவில்லை. குறித்த பத்திரத்தில் உள்ள அமைச்சரவை அந்தஸ்து எனும் ஏற்பாட்டை நீக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சு இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.

    தற்போது வழங்கப்பட்டுள்ள ஆவணங்களை இந்திய ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad