• Breaking News

    உயிருடன் வந்து அமெரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுத்த அல்-கொய்தா தலைவர்!

     அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்த்த நாளன்று அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி காணொளியில் தோன்றி அதிர்ச்சி அளித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்களை விமானத்தை மோதவிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    இந்த சம்பவம் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி நடைபெற்றது. இந்த தாக்குதல் 9/11 எனக் குறிப்பிடப்படுகிறது.

    இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் அமெரிக்கா இராணுவம் ஈடுபட்டது. தலிபான் தலைவர் பின்லேடன் உள்பட முக்கிய பயங்கரவாத தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

    அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கடந்த ஆண்டு உடல்நலம் குன்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

    அதன்பின் அவர் காணொளி எதிலும் தோன்றவில்லை.

    இந்த நிலையில் நேற்று வீடியோவில் தோன்றி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 9/11 தாக்குதல் சம்பவம் அனுசரிக்கப்படும் நாளில் காணொளியினை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் ஜெருசலேம் ஒருபோதும் யூதமயமாக்கப்படாது. சிரியாவில் ரஷிய இராணுவம் மீது அல்-கொய்தா இராணுவம் நடத்திய தாக்குதலை பாராட்டியுள்ளார்.

    எஸ்.ஐ.டி.இ. உளவுக்குழு இந்த காணொளியினை ஆராய்ந்து நேற்று வெளியிடப்பட்டதை உறுதி செய்துள்ளது. இந்த வீடியோவில் தலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது குறித்து அல்-ஜவாஹிரி ஏதும் கூறவில்லை.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad