• Breaking News

    ஒரே ஒரு மகளை பிறந்த நாள் கொண்டாட அனுப்பி வைத்த பெற்றோர்: அடுத்த நாள் சடலமாக திரும்பிய கொடூரம்! நடந்தது என்ன?

     பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பெற்றோர்கள் மகளை கோவாவுக்கு அனுப்பி வைத்த நிலையில், அப்பெண் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம் மஞ்சூரியா மாவட்டம் சேர்ந்தவர் பணிக் குமார், ஜெயலலிதா தம்பதியினர். இவர்கள் இருவரும் அம்மாவட்டத்தில் பிரபல மருத்துவர்களாக இருந்து வருகின்றனர்.

    இவர்களுக்கு ஒரே மகள் நேஹா (24), கடந்த ஆண்டு நேஹா எம்பிபிஎஸ் முடித்த நிலையில், மேற்படிப்புக்கு தயாராகி வந்த நிலையில், அவரை எப்படியாவது மருத்துவராக்கி தங்களது மருத்துவமனையின் பொறுப்பை அவரிடம் வழங்கவேண்டுமென பெற்றோர்கள் திட்டமிட்டிருந்தனர்.

    இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவரது பிறந்தநாளை கோவாவிற்கு சென்று நண்பர்களோட கொண்டாட வேண்டும் என்று மகள் விரும்பியதால், பெற்றோரும் மகளின் ஆசைக்கு சம்மதம் தெரிவித்து நண்பர்கள் மற்றும் சில உறவினர்களுடன் கோவாவிற்கு அனுப்பியுள்ளனர்.

    சனிக்கிழமை நள்ளிரவு கேக் வெட்டி நேஹா பிறந்தநாள் கொண்டாடியதை, பெற்றோர்கள் வீடியோ கால் மூலமாக கண்டு மகிழ்ந்து, பின்பு உறங்கச் சென்றுள்ளனர்.

    அதிகாலையில் அவர்களை நிலைகுலைய வைக்கும் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வந்தது. அவரது மகள் அதிகாலையில் மாரடைப்பால் இருந்ததாக தொலைபேசியில் தகவல் கூறப்பட்டது.

    செல்லமாக வளர்த்த ஒரே ஒரு மகளை இழந்த பெற்றோர் கதறி துடித்துள்ளனர். மகளின் ஆசைக்குத்தானே இவ்வாறு அனுப்பினோம், இவ்வாறு நடக்கும் என்று தெரிந்திருந்தால் அனுப்பி இருக்கவே மாட்டோமே என்று கதறிய நிலையில், ஹைதராபாத்திற்கு புறப்பட்டு மகளின் உடலை கொண்டு வந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad