மல்லாகத்தில் சக்திவாய்ந்த வெடிபொருள் கண்டுபிடிப்பு!
இன்று (2021.09.24) சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் கிழக்கு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சக்திவாய்ந்த வெடிபொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
தனியார் காணியில் உள்ள கிணறு ஒன்றினைச் சுத்தம் செய்யும்போது குறித்த வெடிபொருள் அவதானிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவைப் பெற்றபின்னர் குறித்த வெடிபொருள் மீட்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை