அரிசிக்கு தட்டுப்பாடு! ஒப்புக்கொண்டது அரசாங்கம்
உள்ளூரில் அரிசித் தட்டுப்பாடு எற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தட்டுப்பாடின்றி போதியளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், மேலதிக களஞ்சிய இருப்பைப் பேணுவதற்கு இயலுமான வகையில் 1,00,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பாதூகாப்பு கையிருப்பாக இதனை பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன, சிகப்பு அரிசிக்கு உச்ச சில்லறை விலை 95 ரூபாவாகவும் நாட்டரிசிக்கான உச்ச சில்லறை விலை 98 ரூபாவாகவும் சம்பா அரிசிக்கான விலை 103 ரூபாவாகவும் கீரி சம்பா அரிசியின் விலை 125 ரூபாவாகவும் அமையும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நுகவர்வோர் பாதூகாப்பு அதிகார சபை இரத்துச் செய்துள்ளது.
அமைச்சரவை தீர்மானத்துக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 30-32 ரூபாவாக இருந்த நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசு 50-52 ரூபா வரை அதிகரித்துள்ளது.2020 இல் விவசாயிகளை பலப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது.
2020 இல் ஒரு அரிசி மணி கூட இறக்கமதி செய்யப்படவில்லை. மறுபக்கம் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அரிசி இறக்கமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரவாத விலை நீக்கப்பட்டது குறித்தோ அரசி இறக்குமதி செய்யப்படுவது குறித்தோ விவசாயிகள் பயப்பட தேவையில்லை. அரிசி ஆலை உரிமையாளர்கள் குறைந்த விலைக்கு அரிசி பெற முயன்றால் நெல்சந்தைப்படுத்தும் சபை தலையிட்டு கூடுதல் விலைக்கு அவற்றை கொள்வனவு செய்யும் என்றார்.
கருத்துகள் இல்லை