அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் - அரசின் அதிரடி நடவடிக்கை
சீனி மற்றும் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களை நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்தால் 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்படலாம் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அபராத தொகை இதுவரையில் 2500 ரூபாயாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை