தலிபான்களுக்கு சவாலிட களம் இறங்கியுள்ள புலம்பெயர் ஆப்கான் பெண்கள்
ஆப்கானிஸ்தானில் பெண்கள் முகத்தை மறைக்கும் ‘ஹிஜாப்’ என்ற ஆடைகளை அணிந்தே வெளியே செல்லமுடியும் என்ற கட்டுப்பாட்டை தலிபான்கள் விடுத்துவருவது யாவரும் அறிந்ததே.
குறிப்பாக பாடசாலைகளில் மாணவிகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற குறிப்பில் அண்மையில் ஒரு புகைப்படம் வெளியாகி உலக மட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
முழுவதுமாக கறுப்பு ஆடை அணிந்த பாடசாலை மாணவிகள் தலிபான்களின் கொடியை ஏந்தியபடி கல்விகற்கும் ஒரு புகைப்படம் வெளியாகி மனித உரிமை ஆர்வலர்களின் ஒட்டுமொத்த கண்டனத்திற்கும் உள்ளாகியிருந்தது.
‘ஷரியா’ சட்டம் என்ற பெயரில் பெண்கள் மீது தலிபான்கள் நிர்ப்பந்தித்துவரும் ஆடைக் கட்டுப்பாடுகளை சவாலிடும் முகமாக, புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவரும் ஆப்கானிஸ்தான் இளம் பெண்கள் தங்களது பாரம்பரிய ஆடைகளுடன் புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்கள்.
தலிபான்களின் ஆடைக்கட்டுப்பாடுகளுக்கு தமது எதிர்ப்பினைக் காண்பிக்கும் முகமாகவே இவ்வாறு பாரம்பரிய ஆடைகளை அணிந்து புகைப்படங்களை தாம் வெளியிட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை