இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.
அதன்படி தனிமைப்படுத்தல் ஊரடங்கானது எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கோவிட் தொற்று நிலை தீவிரமடைந்ததையடுத்து கடந்த 20 ஆம் திகதி முதல் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது அமுல்படுத்தப்பட்டது.
நாட்டில் கோவிட் தொற்று நிலை தீவிரமடைந்ததையடுத்து கடந்த 20 ஆம் திகதி முதல் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது அமுல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ச்சியாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு எதிர்வரும் 13ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது அமுல்படுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான சந்தர்ப்பதிலேயே தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை