• Breaking News

    "இனப்படுகொலையாளி கோட்டா" அதிர்ந்தது நியூயோர்க் நகரம்

     


    அமெரிக்காவில் இனப்படுகொலையாளி கோட்டாபய ராஜபக்ச என தெரிவித்து அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் இடம்பெற்றுள்ளது.

    அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களே நியூயோர்க் நகரில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


    அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றியிருந்தார்.


    இந்த நிலையில் மேற்படி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன், ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டறியுமாறும், அரசியல் எதிரிகளை அடக்குவதை உடனடியாக நிறுத்துமாறும் ஆர்ப்பாட்டகார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad