புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவல்! யாழில் மீட்கப்பட்ட பெருந்தொகை மஞ்சள் மூடைகள்
யாழ்ப்பாணம் - பாசையூர் பகுதியில் 1,500 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து 2 படகுகளில் 24 மூடைகளாகப் பொதி செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் சிறிலங்கா காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் புலனாய்வு பிரிவினரால் இன்று காலை இந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டன.
மஞ்சளைக் கடத்தி வந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பாசையூரைச் சேர்ந்த 64 மற்றும் 32 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் சுங்கதிணைக்கள அதிகாரிகளிடம் அந்த மஞ்சள் பொதிகள் ஒப்படைக்கபடவுள்ளன.
கருத்துகள் இல்லை