• Breaking News

    மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் கோவிட் தொற்றால் மரணம்

     மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசிய பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது 80ஆவது வயதில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமாகியுள்ளார்.

    திடீர் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் இரவு அவர் உயிரிழந்துள்ளார்.

    இவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

    மூத்த ஊடகவியலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார்.

    குரலற்ற மக்களின் குரலாகவும் குறிப்பாகக் காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கவும், அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்ததோடு, பல்வேறு போராட்டங்களையும் தலைமை தாங்கி முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad