குவிந்துள்ள கொரோனா சடலங்கள்! உயர் அதிகாரியொருவர் வெளியிட்ட தகவல்
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அதிகளவிலான சடலங்கள் குவிந்துள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்திய சாலையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அநுராதபுரம் பொது மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநகர சபையினால் நிர்வகிக்கப்படும் மின்சார தகனசாலை சில தினங்களாக செயலிழந்துள்ள காரணத்தினாலேயே இந் நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு நாளைக்கு ஆறுக்கு மேற்பட்ட சடலங்களை அநுராதபுரம் பொது மையானத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்சார தகன சாலையில் தகனம் செய்யப்பட்டு வந்த நிலையிலேயே இந் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.
அநுராதபுரம் பண்டுலகம பகுதியில் மத்திய நுவரகம்பலாத்த பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படும் மின்சார தகன சாலையில் தற்சமயம் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு கொரோனா சடலங்களை மாத்திரமே தகனம் செய்ய முடியும் நிலை காணப்படுகின்றது என சுகாதார தரப்பினர் மேலும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை