• Breaking News

    மக்களை அடக்கி ஆள முயல்கிறது ராஜபக்ச அரசு - சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

     இராணுவத்தின் ஊடாக அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி மக்களை அடக்கி ஆள அரசாங்கம் முயல்கின்றது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

    இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கையிலுள்ள பலவேறுபட்ட வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

    ஐ.நா.ஆணையகம் மற்றும் ஐ.நா.பொதுச்சபை ஆகியன இலங்கை விவகாரத்தில் பிழையான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு தூதுவர்களுடன் இடம்பெறுகின்ற சந்திப்பில் அவர் கூறி வருகிறார்.

    இலங்கை என்பது ஜனநாயகத்தின் உச்சத்தில் இருக்கின்றது போன்றும், மனித உரிமைகளை அரசு மதித்து நடக்கின்றது என்ற கோணத்திலும் பேசுகின்ற ஜீ.எல்.பீரிஸ், இலங்கையில் இருக்கக்கூடிய பயங்கரவாத தடைச் சட்டம் இன்றும் அப்படியே இருக்கின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஒருபக்கத்தில் தங்களை தூய்மையானவர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் இலங்கை அரசாங்கம் மறுபுறத்தில், தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல அனைத்து மக்களுக்கும் இன்னல்களை உருவாக்கியுள்ளது.

    அத்துடன், இலங்கை பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. பஞ்சம், பட்டினியை நோக்கி இலங்கை அரசு நகர்ந்து கொண்டு இருக்கின்றது என அவர் கூறியுள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad