பால்மாக்களின் விலை அதிகரிப்பு! வெளிவரவுள்ள இறுதித் தீர்மானம்
பால்மாக்களின் விலையினை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி வாழ்க்கை செலவு பற்றிய குழு எதிர்வரும் வியாழக்கிழமை கூடி இறுதி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளது.
எனினும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையினை 200 ரூபாயில் உயர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நிதி அமைச்சு கடந்த வாரம் அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஒரு கிலோகிராம் பால்மா விலையினை 350 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.
சர்வதேச சந்தையில் பால்மாக்களின் விலை அதிகரிப்பு, கப்பல் கட்டணம் உயர்வு மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி போன்ற காரணங்களுக்காகவே பால்மா விலையினை அதிகரிக்க வேண்டும் என இறக்குமதியாளர்கள் சங்கம் தொடர்ந்தும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்துகள் இல்லை