Monday, May 12.
  • Breaking News

    கஜேந்திரனின் கைது விவகாரம்! ஐ.நாவில் முக்கிய அதிகாரிகள் கலந்துரையாடல்

     தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்றைய தினம் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக ஐ.நாவிலிருந்து பல எதிர்ப்பு குரல்கள் கிளம்பியுள்ளன.

    ஐ.நாவின் பொறிமுறையின் கீழ் இந்திய தேசியத்தை பின்பற்றி அஹிம்சை வழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தியாகி திலீபனின் நினைவேந்தலை நினைவு கூருவது எந்த விதத்தில் தவறு என்று உலக தமிழர் இயக்கத்தின் மக்கள் தொடர்பாளர் பிரிவிற்கு பொறுப்பான நிஷா பீரிஸ்( Nisha Peiris)கேள்வியெழுப்பியுள்ளார்.

    மேலும் கஜேந்திரனின் கைது விவகாரம் தொடர்பில் நாளைய தினம் ஐ.நாவினுடைய அதிகாரிகள் மட்டத்தில் முறைப்பாடொன்று எழுத்து மூலமாகவும்,வாய்மொழி மூலமாகவும் பதிவு செய்யப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

    மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது இவ்வாறான அடக்குமுறை பிரயோகிக்கப்படுமாயின் சாதாரண தமிழ் குடிமகனுக்கு இலங்கையில் எவ்வாறு பாதுகாப்பு காணப்படுமெனவும் இதன்போது கேள்வியெழுப்பியுள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad