பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரி ஓட்டமாவடியில் கைது
பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரியொருவர் ஹஜ்ரா வித்தியாலய வீதி, ஓட்டமாவடி-3 எனும் முகவரியிலுள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று 2021- 09-17ம் திகதி வெள்ளிக்கிழமை 01.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
48 வயதுடைய இவரிடமிருந்து சுமார் 30 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவருடன் தொடர்புபட்ட நபர்கள் தொடர்பிலான தகவல்கள் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அத்துடன், குறித்த பிரதேசத்தில் போதை வியாபாரத்தில் ஈடுபடுவோர், போதை பாவிப்போர் தொடர்பில் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா அச்சுறுத்தல், பொது முடக்கம் அமுலிலுள்ள நிலையிலும் வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வு பிரிவினரும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கை காரணமாக இவ்வாறான போதை வியாரிகள் கைது செய்யப்பட்டு சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை