கோதுமை மாவின் விலையை உடனடியாக அதிகரிப்பதற்கு ப்ரிமா நிறுவனம் தீர்மானம்
ப்ரிமா சிலோன் (பிரைவேட்) லிமிடெட், கோதுமை மாவின் விலையை 12 ரூபாவினால் உடனடியாக அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
எனினும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி ஒருவர், இந்த முடிவு குறித்து தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலையை அதிகரித்த, ப்ரிமா நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், கோதுமை மா நிறுவனங்களுக்கு, தமது பொருட்களுக்கான விலையைத் தாமாகவே அதிகரிக்க எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை