இலங்கையில் முடக்க நிலை தளர்த்தப்படுவது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்
நாடு திறக்கப்படுவதற்காக சூழல் ஓரளவு ஏற்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டை திறப்பது தொடர்பில் ஊடகவியலாளர் பிரதி சுகாதார பணிப்பாளரிடம் வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் நாட்டை ஒரே நேரத்தில் முழுமையாக திறக்க கூடாதென்பதே சுகாதார பிரிவினரின் கருத்தாக உள்ளது.
நாட்டை கட்டம் கட்டமாகவே திறக்க வேண்டும். அவ்வாறு கட்டம் கட்டமாக திறக்கும் போது ஏற்படும் சிக்கல்களை தீர்த்து முன்னோக்கி செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஒரே நேரத்தில் நாட்டை திறந்தால் அதன் மூலம் ஏற்படும் முடிவு ஆபத்தானதாக இருக்கும் என பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை