சிங்கம் மற்றும் யானையை தத்தெடுத்துள்ள சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார், இவர் நடிப்பில் டான் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து ஆண் சிங்கம் மற்றும் பெண் யானையை தத்தெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஷ்ணு என்ற ஆண் சிங்கம் மற்றும் ப்ரக்ரிதி என்ற பெண் யானையை 6 மாதத்திற்கு தத்தெடுத்துள்ள சிவகார்த்திகேயன், அவரிற்கு தேவைப்படும் உணவு மற்றும் பராமரிப்பிற்கும் அவர் உதவ உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் சிவகார்த்திகேயன் இதேபோல் "அணு" என்ற பெண் புலியை கடந்த 2018 - 2020 வரை தத்தெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை