• Breaking News

    உள்ளாடை இல்லையென்றால் எவரும் உயிரிழக்க மாட்டார்கள் - அமைச்சர் சர்ச்சை கருத்து

     நாட்டில் உள்ளாடைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவற்றை ச.தொ.ச ஊடாக விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உள்ளாடைகள் இல்லை என்றால் எவரும் உயிரிழந்துவிட மாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

    ஆனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் மரணிப் பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் உள்ளாடை முதல் இறக்குமதி செய்தமை குறித்து அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்றும் உள்ளாடைகளை அணியாமல் இருப்பது இதனை விட நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad