கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு
தியாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் திலீபன் மரணமடைந்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
மேலும், திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை தடுக்கும் நோக்கில் ஆங்காங்கே பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை