• Breaking News

    சீனாவின் தொலைபேசிகளை தூக்கி எறியுங்கள்! அதிரடியாக விதிக்கப்பட்ட தடை

     சீனாவின் கைபேசிகளை தூக்கி எறியுமாறு லித்துவேனியா நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அந்நாட்டு மக்களுக்கு பரிந்துரைத்துள்ளது.

    ஜியோமி கைபேசியின் எம்.ஐ.10 ரி 5 ஜீ கைபேசி ஐரோப்பிய ஒன்றியத்தில் செயல் இழக்க செய்யப்பட்டிருந்த போதிலும் எந்த நேரத்திலும் அதனை தொலைவில் இருந்து இயக்க முடியும் என்பதே இதற்கான காரணம் என லித்துவேனியா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

    சீனாவின் கைபேசிகளை கொள்வனவு செய்வதை தவிர்ப்பது மற்றும் நியாயமான விலைக்கு கொள்வனவு செய்தவற்றை அப்புறப்படுத்துவதே எமது பரிந்துரை என்று லித்துவேனியா பாதுகாப்பு அமைச்சர் மாகரிஸ் அபுகேவியஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

    ஜீயோமி கைபேசியின் பயன்பாட்டு தரவுகள் சிங்கப்பூரில் உள்ள சேவை வழங்குநருக்கு அனுப்பி வைக்கப்படுவதாக லித்துவேனியா தேசிய சைபர் நிலையம் தெரிவித்துள்ளது.

    சீனாவின் ஹுவாவே நிறுவனம் பி.40 5 ஜீ கைபேசியில் கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் சீனாவின் வன் பிளஸ் கைபேசியில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தமது கைபேசி பாவணையாளர்களின் தரவுகள் வெளியில் செல்வதில்லை என்று போல்விக் பிரசேத்தின் ஹூவாவே பிரதிநிதி கூறியுள்ளார்.

    லித்துவேனியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் அண்மையில் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக சீனா கடந்த மாதம் சீனாவுக்கான லித்துவேனியா தூதுவரை திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad